முகப்பு /தென்காசி /

Tenkasi Weather Update : சங்கரன்கோவிலை குளிர்வித்த கோடை மழை..!

Tenkasi Weather Update : சங்கரன்கோவிலை குளிர்வித்த கோடை மழை..!

X
சங்கரன்கோவிலை

சங்கரன்கோவிலை குளிர்வித்த கோடை மழை

Tenkasi Weather Update : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெயிலுக்கு இடையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாகவே இருந்து வந்தது.

கடந்த சில நாட்களில் 35 டிகிரி செல்சியஸில் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை தென்காசியில் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் தற்போது சங்கரன்கோவில் கோடை மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சங்கரன்கோவிலில் பெய்த கனமழை

சங்கரன் கோவிலில் காலையிலிருந்து 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில் மாலை 4 மணியளவில் வெயிலுடன் கூடிய மழை பெய்தது. சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து அரை மணி நேரம் நீடித்த இந்த கோடை மழையால் மாணவர்கள் மழையில் ஒரு ஆட்டம் போட்டனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi, Weather News in Tamil