ஹோம் /தென்காசி /

தென்காசிக்கு கப்பலில் வரும் தேக்கு மரங்கள்.. ஏன் தெரியுமா?

தென்காசிக்கு கப்பலில் வரும் தேக்கு மரங்கள்.. ஏன் தெரியுமா?

X
தேக்கு

தேக்கு கட்டைகள்

Tenkasi | மலேசியா நைஜீரியா இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து நாங்கள் மரங்களை இறக்குமதி செய்து விற்று வருவதாக தென்காசி மர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் உள்ள மர வியாபாரிகள் இங்கு மரங்கள் வெட்ட தடை உள்ளதால் இந்தோனேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தேக்கு உள்ளிட்ட மரங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்திரா காந்தி 1975 ல், வனத்தை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பேனிகாக்கும் வகையில் மரங்கள் வெட்ட தடை உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தின் நடைமுறை படுத்தினார். இதன் எதிரொலியாகமரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டது.

இருப்பினும் கேரளாவில் இருந்து கள்ளச்சந்தை மூலம் தமிழகத்திற்குமரங்கள் வந்து கொண்டு இருந்தது. தற்போது கேரளா அரசின் கெடுபிடியான நடவடிக்கையால் அதுவும் நின்று போக மர வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து மரங்களை இறக்குமதி செய்கின்றனர் தொடங்கியுள்ளனர். போதிய மரங்கள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால் வெளிநாட்டிலிருந்து வாங்குகின்றனர் என்று கூறுகின்றனர்.

மர வியாபாரிகள் இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வேங்கை, தேக்கு ஆகிய மரங்களை இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் தூத்துக்குடிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கிறது. தூத்துக்குடியில் இருந்து சுற்றியுள்ள பகுதியில் மர வியாபாரிகள் தேக்கு வேங்கை போன்ற மரங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

ALSO READ | கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை.. கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் சேவைகள் என்ன?

60 வருடமாக மர வியாபார தொழில் இருக்கும் மாரிமுத்து அவர்கள் இது தொடர்பாக நம்மிடம் பேசினார் அதில், ”மலேசியா நைஜீரியா இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து நாங்கள் மரங்களை இறக்குமதி செய்து விற்று வருகிறோம்.

முன்பு இந்தியாவில் கிடைக்கும் அப்பொழுது விலை குறைவாக இருந்தது தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் விலை அதிகரித்து உள்ளது, இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மரங்களையே வாங்கி விற்று வருகிறோம்.” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi