தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடைபெற்ற மெகா இயந்திர, வர்த்தக கண்காட்சியை ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் சிறு, குறு தொழில்களான பெண்கள் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் , சிரட்டையினால் செய்யப்பட்ட அழகுப் பொருட்கள், மரத்தினால் செய்யப்பட்ட குடுவை பேனா போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், ஆரோக்கியமான உணவு பொருட்கள் வரிசையில் பெண்களால் தயாரிக்கப்பட்ட குக்கீஸ், தானியங்களால் செய்யப்பட்ட மதிப்பு கூட்டும் பொருட்கள் , அவல் மிச்சர் என உணவு பிரியர்களை இயற்கை முறையில் ஈர்க்கும் விதமாக பல இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டம் பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தேங்காய் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டும் பொருட்களாகிய டெசி கேக், தேங்காய் பவுடர் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், இந்த தேங்காய் பவுடரை நாம் உணவில் தேங்காய் பயன்படுத்துவதற்கு பதிலாக பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், பெண்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களாகிய குரோசே பொருட்களும் காண்போரை கவரும் வகையில் கண்காட்சியில் இடம் பெற்றன. இதேபோல, தமிழ்நாட்டில் ஈரோட்டில் அமைந்திருக்கும் பெண்களால் தயாரிக்கப்படும் ஆர்கானிக் நாப்கின்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இயற்கையோடு இணைவோம் என்ற வாசகத்தை முன்வைத்து பெண்களால் தயாரித்து விற்பனை செய்யப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த மெகா இயந்திர கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவைப்படும் வாகனங்கள், ட்ராக்டர்கள், பயிரிடுவதற்கான இயந்திரங்கள், களையெடுப்பதற்கான இயந்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன.
பலவகையான வாழை உள்ளிட்ட மரங்களை விற்பனை செய்யும் நர்சரியும் இங்கே இடம்பெற்று இருந்தன. மரத்தினால் செய்யப்படும் இலையின் நடுவில் அமைக்கப்படும் மெட்டல் பிளேட் டிசைன்களும் காண்போரை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கே, பெரிய நிறுவனங்களில் எண்ணெய்யைப் பயன்படுத்துவதற்கான மாற்றுப் பொருளாக அமைந்திருக்கும் பயோபிளும் கிலோ 13 ரூபாய்க்கு இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டது. ஹெச்டிஎஃப்சி, சென்ட்ரல் பேங்க் போன்ற கடன் வழங்கும் நிறுவனங்களும், சோபா, மரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றிருந்தனர்.
இந்த கண்காட்சியில், தென்காசி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதல் ரோபோடிக்ஸ் கற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் சார்பில், குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் ரோபோட் கொண்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மெகா இயந்திர மற்றும் வர்த்தக கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi