முகப்பு /தென்காசி /

பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தென்காசி மாணவர்கள்..

பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தென்காசி மாணவர்கள்..

பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவர்கள்

பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவர்கள்

Tenkasi News | தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தென்காசியில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவிநாயகா குழுவினரின் தப்பாட்டம் பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியரின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புற நடனம், கும்மி பாடல் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சமூக நலத்துறையின் ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொம்மைகள் பேசும் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் இடம்பெற்ற பூலித்தேவன் மற்றும் முதலமைச்சரின் புகைப்படம் அருகில் நின்று மாணவ, மாணவியர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi