முகப்பு /தென்காசி /

தென்காசியில் சிலம்பம் போட்டி.. மாணவ, மாணவிகள் அசத்தல்!

தென்காசியில் சிலம்பம் போட்டி.. மாணவ, மாணவிகள் அசத்தல்!

X
Silambam

Silambam competition 

Tenkasi silambam competition | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி அசத்தினர்.

தென்காசியில் சிலம்பம் டிரஸ்ட் மட்டும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, தென்காசி, திருநெல்வேலி விருதுநகர் போன்ற 11 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

அதில் தனித்திறமை காண சிலம்ப சண்டையும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் அசத்தலாக சிலம்பம் சுற்றி அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இதில், பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு கேடையம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tenkasi