ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

Tenkasi District | தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணர்கள் கல்வி உதவித் தொதை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான வழிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணர்கள் கல்வி உதவித்தொதை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மிகாமல் உள்ள மாணவ, மாணவி ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholorship என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பம் மேலும் மேற்படி 2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Must Read : திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்த மிஸ் பண்ணிட்டீங்களா.. இதோ புகைப்படம்!

ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942. மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholorship@gmail.com. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Scholarship, Tenkasi