தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுரை சார்ந்த அரசு பள்ளி மாணவி சத்திய பிரபா சிலம்பம் சுற்றிக்கொண்டே தனிம வரிசை அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை 50 வினாடியில் சொல்லி உலக சாதனை படைத்துள்ளார்.
வீர கேரளம் புதூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் சக்தி பிரியா. வேதியியல் பாடத்தில் தனிமங்கள் என்ற பெயரை கேட்டாலே மாணவர்களுக்கு அலர்ஜி வரும். ஏனெனில் அதை படித்து மனனம் செய்வது என்பது பெரிய சவாலான விஷயம்.
ஆனால். சத்தியப்பிரியாவோஅசால்டாக 118 தனிமங்களின் பெயர்களை வெறும் ஐம்பது வினாடியில் சொல்லி உலக சாதனை செய்து அசத்தியுள்ளார். இதற்கு சக்தி பிரபாவின் அறிவியல் ஆசிரியை மாலதி வழிகாட்டினார் என்பது கூடுதல் சிறப்பு.
சத்திய பிரியாவுக்கு கொரோனா காலத்தில் சிலம்பம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து யோகா பயிற்சியிலும் ஆர்வம் காட்டி உள்ளார். மனதை ஒருநிலைப்படுத்தி சிலம்பம் சுற்றிக்கொண்டே 118 தனிமங்களின் பெயர்களை அழகாக கூறினார். இரண்டிலும் ஒரே சமயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதை அனாயாசமாக செய்தார் சத்தியப்பிரியா.
மேலும் திருக்குறள் கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி போன்ற எந்த போட்டிகளையும் சக்தி பிரபா விட்டு வைப்பதில்லை அனைத்திலும் பங்கேற்று பரிசுகளை தட்டி செல்வார். குற்றாலத்தில் நடந்த யோகா போட்டியிலும் முதல் பரிசையும் வென்றுள்ளார்.
தந்தையை பிரிந்து தாயுடன் வாழும் அவருக்கு எத்தனை கஷ்டங்களை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார். அவர் கல்விக்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை உதவ வேண்டும் என்று சக்தி பிரபாவின் தாயாரின்கோரிக்கை வைத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவருக்குஉதவ விரும்புவோர் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.
சே.சக்திபிரபாசே 2/191, வேதகோயில் தெரு, வீரகேரளம்புதூர், தென்காசி தொலைபேசி எண்கள் : 9080277458
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi