தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வெஜிடபிள் டே கொண்டாடப்பட்டது. எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெஜிடபிள் டேக்காக ஆசிரியர்கள் விவசாயி போல வேடமனிந்து காய்கறி கடைகளும் போட்டிருந்தனர். அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளராக குழந்தைகள் சூஸ் செய்யும் காய்கறியில் இருக்கும் பயன்கள் குறித்து தெரிவித்து அந்த காய்களை எடை போட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஆசிரியர்களால் வெஜிடபிள் கார்விங் அழகாக நேர்த்தியாகவும் செய்யப்பட்ட இருந்தது. வெஜிடபிள் டேக்காக தோரணங்கள் அனைத்தும் வாழைப்பூ, முள்ளங்கி வெண்டைக்காய் தக்காளி கத்தரிக்காய் போன்றவை தோரணங்களாக கட்டப்பட்டிருந்தது. ஆசிரியர்களால் செய்யப்பட்ட கத்தரிக்காய் கேரட் வைத்து செய்யப்பட்ட வெஜிடபிள் விநாயகர், லெமன் மற்றும் கேரட் பயன்படுத்தி செய்யப்பட்ட வாத்துகள், மேலும் வெஜிடபிள்களால் செய்யப்பட்ட படகுகள் மனித உருவ பொம்மைகள் போன்றவை குழந்தைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
மேலும் காய்கறிகளை வரைந்து அதற்கு வண்ண வண்ண கலர் களையும் போட்டு அதன் அருகில் விந்தை மனிதன் என ஒரு வெஜிடபிள் மனிதனையும் சேரில் அமர வைத்திருந்தார்கள். காய்கறிகளைக் கொண்டு கிரீடம் செயின் போன்றவற்றையும் அணிந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விவசாயி யாக வேடமடைந்து ஆசிரியர்கள் போடப்பட்டிருந்த கடை குழந்தைகளுக்கு காய்கறி மீது அதிக ஆர்வத்தை உண்டாக்குவதாகவும் இதன் மூலமாக குழந்தைகள் உணவில் அதிக காய்கறிகளை உட்கொள்வார்கள் என்றும் அப்பள்ளி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
கடைகளுக்கு வாங்க வரும் குழந்தைகளிடம் அவர்கள் தேர்ந்தெடுத்த காய்கறிகளில் இருக்கும் நன்மைகளைப் பற்றி விவசாயி போல் வேடம் அணிந்து இருக்கிற ஆசிரியரும் எடுத்துரைக்கின்றார். இந்த வெஜிடபிள் டே வின் ஹைலைட் என்ன தெரியுமா மாணவர்கள் வாழை இலை சாப்பிட்டது தான். ஒரு வகுப்பில் இருக்கிற 100 பேரும் வரிசையா அமர்ந்து தங்கள் கொண்டு வந்திருக்கிற காய்கறி உணவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக உண்டனர்.
குழந்தைகளுக்கு முன்னதாகவே நாட் போட்டு ஒரு நபருக்கு ஒரு காய்கறி என தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர் அந்த காய்கறியினால் செய்யப்பட்ட உணவுகளை வாழை இலையில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைகளைப் போலவே மாறி அனைத்து குழந்தைகளிடமும் உணவுகளை வாங்கி ஷெஃப் தாமு போல் கமெண்ட்ஸும் சொல்கின்றார். மேலும் குழந்தைகள் அனைவரும் ஒன்று கூடி கூட்டாஞ்சோறு சாப்பிடும் அழகை பார்ப்பதற்கே மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று தோன்றுகிறது.
இரண்டாம் வகுப்பில் பாட புத்தகத்தில் வந்திருக்கும் விந்தை மனிதனை வேடம் போல் செய்து காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு மாணவர்கள் விந்தை மனிதன் பாடல்களை தலையசைத்து கைகளை அசைத்து பாடும் அழகை பார்பதற்கே அசத்தலாக இருந்தது. மேலும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமணன் குழந்தைகளுடன் குழந்தைகளாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எல் கே ஜி யு கே ஜி குழந்தைகளுக்கு காய்கறிகளின் நன்மைகள் மற்றும் வெஜிடபிள் சாப்பிடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி குழந்தைகளின் போக்கிலேயே எடுத்துரைத்தார். அதனை பார்ப்பதற்கு நம் பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு ஆசிரியர் நமக்கில்லையே என்று சிறிது ஏக்கமாகத்தான் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.