பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.500-ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். SCSCA/ST பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், BBC/BCM/MBCOC பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- (எழுபத்திரண்டு ஆயிரம் ) மிகாமல் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம், அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.800/- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம். பட்டதாரிகளுக்கு ரூ.1000/- வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ / மாணவியர்.பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது . எனிலும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்,வேலைவாய்ப்பு தகுதி உள்ளவர்கள் அடையாள அட்டை(பழையது) மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online Printout போன்றவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது htts/tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப்பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது/online printout), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ்(TC), தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின். அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Local News, Tenkasi