முகப்பு /தென்காசி /

தொடர்ந்து அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்!

தொடர்ந்து அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்!

X
Universal

Universal book of records

Tenkasi News | தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களின் அடையாளமான சிலம்பம் 23 நிமிடம் 23 வினாடி சுற்றி யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்தனர் சங்கரன்கோவில் மாணவர்கள்.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிலம்பம் சுழற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி ஆங்காங்கே, நடைபெற்று வருகிறது. அத்துடன், வெளிநாடுகளான சிங்கப்பூர், கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார்பள்ளியில் இந்த சிலம்ப சாதனை போட்டி நடைபெற்றது.

இந்த மாபெரும் உலக சாதனை போட்டியில் சங்கரன்கோவில், புளியங்குடி சிந்தாமணி உள்ளிட்ட ஊர்களில் உள்ள 14 பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சாதனைப் போட்டியானது காலை 10:23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, 23 நிமிடங்கள் 23 வினாடிகள் சிலம்பம் சுற்றி யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்டில் மாணவர்களின் சாதனை இடம் பெற்றது. இந்த போட்டியானது, குமார் ஆசான் தலைமையில் நடத்தப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Sankarankovil Constituency, School student