தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற சங்கரன்கோவில் சங்கரநாரா யண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.
5ஆம் நாளான நேற்று முன்தினம் இரவு சுவாமி- அம்பாள் 63 நாயன்மார்களுக்கு திருக்கயிலாய காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் 63 நாயன்மார்கள். பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஊடல் உற்சவம் நடைபெற்றது. சங்கரநாராயணன் கோவிலின் கதவுகளை அடைத்தபடி உள்ளே ரிஷப வாகனத்தில் இருக்கும் அம்பாள் மற்றும் சுவாமிக்கு தீபாராதனைகள் செய்யப்படும் மேலும் கதவுகள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாவிக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வரும் மே 3 - ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.இதில் விநாயகர், அம்பாள் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.