முகப்பு /தென்காசி /

செல்வ வளம் பெருக... தென்காசி சங்கரநாராயணன் கோவிலில் 108 சங்குகள் வைத்து சோமவார பூஜை

செல்வ வளம் பெருக... தென்காசி சங்கரநாராயணன் கோவிலில் 108 சங்குகள் வைத்து சோமவார பூஜை

X
தென்காசி

தென்காசி கோவில்

Tenkasi | தென்காசி சங்கரநாராயணன் திருக்கோவிலில்கார்த்திகை மாதத்தில் சோமவாரத்தில் 108 சங்குகள் ஓம் வடிவத்தில் வைத்து  பூஜை நடைபெற்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்மன்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் செய்வது செல்வ வளத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. சோம வாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நெல் மணிகளை கொண்டு 'ஓ' என்னும் வடிவத்தில் எழுதி அதன்மேல் 108 சங்குகளில் புனித நீரை ஊற்றி அதனை கங்கை நீருக்கு ஒப்பாக வைத்து பூஜைகள் செய்வர்.

கோவில் பூஜை

அதற்கு முன்பாக, இரு குடங்களில் தண்ணீர் வைத்து அதற்கு மேல் தேங்காய் வைத்து கும்பம் போல் தயார் செய்து, ஹோமம் வளர்த்து மந்திரங்கள் ஓதப்படும். அதன் பிறகு கும்பத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டு கும்பத்தில் இருக்கும் நீரை கொண்டு சங்கர நாராயணனுக்கும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அதன் பின்னர் மற்ற அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த சங்காபிஷேகம் கார்த்திகை மாதம் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30-ல் இருந்து ஆரம்பமாகும்.

பொதுவாக சங்கு செல்வங்களை குறிக்கும் ஒரு பொருளாகும். இந்த சங்காபிஷேகம் 108 சங்குகளை கொண்டு செய்வதால் இதில் கலந்து கொண்டாலோ அல்லது அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சங்கை வாங்குவதால் வீட்டில் செல்வ வளம் நிறைந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் சோம வாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi