தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் நெல்கட்டும்செவல் என்னும் ஊரில் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராளி பூலித்தேவன் வாழ்ந்தார். அவர் இந்த ஊரை ஆண்ட பாளையக்காரர் ஆவார். ஆங்கிலேயருக்கு வரி கட்ட முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக போர்கள் பல புரிந்த ஒரு மாவீரன். வெறும் ஒரு பாளையக்காரர் ஆங்கிலேய படைகளுக்கு 12 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகையல்ல. அவரின் நினைவை போற்றும் விதமாக, அவரின் வீரத்தை அடுத்ததடுத்ததலைமுறைகளுக்கு விளக்க அவர் வாழ்ந்த மாளிகையை மாநில அரசு மக்கள் வந்து பார்க்கக்கூடிய சுற்றுலா தலமாக மாற்றியது.
வரலாறு விரும்பும் நபரா நீங்க... அப்ப நிச்சயமா இந்த இடத்திற்கு ஒரு விசிட் அடிங்க.... பஸ் மூலமாக இந்த மாளிகைக்கு வர வேண்டும் என்று நினைத்தால் நம்பர் 35 பேருந்தில்ஏறி நெல்கட்டும்செவலை வந்தடையலாம் அல்லது வாசுதேவநல்லூரில் இருந்து ஆட்டோ மூலமாக கூட இந்த பகுதிக்கு வரலாம். மாளிகை சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும் அனுமதிக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. மாளிகையின் முகப்பில் உள்ள கோட்டையில் தான் பூலித்தேவன்தர்பார்கள் நடைபெறும்.
1998ல் அப்போதைய முதலமைச்சர் திரு. கருணாநிதிஅவர்களால் பூலித்தேவன்மாளிகை சீரமைத்து கட்டப்பட்டது. முன்னால் இருக்கும் மண்டபம் கோட்டையின் ஒரு பகுதி தான். உள் பகுதிகளை மட்டுமே சீரமைத்து கட்டப்பட்டது. மேலும் இங்கே ஒரு நூலகமும் இருக்கிறது. இந்த நூலகத்தில் பல வரலாற்று நூல்களும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் புலி தேவர் பற்றிய வரலாற்று குறிப்புகள் கல்வெட்டுக்களாக ஆங்காங்கே இந்த மாளிகையில் பொறிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. அவரின் நினைவாக பல ஓவியங்களும் வரையப்பட்டிருக்கிறது. பூலித்தேவன்மாளிகையில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் கலைக்கூடத்தில் அவர் பயன்படுத்திய வால், அவரின்ஆடைகள் போன்றவற்றை காணலாம். அதிமுக ஆட்சி காலத்திலும் இந்த மாளிகை சீரமைக்கப்பட்டுள்ளதாக இந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மறைந்த நம் தமிழர்களின் வீர வரலாற்றை உலகிற்கு அமைதியாக எடுத்துக் கூறும்இந்த மாளிகை போன்ற இடங்களை மாநில அரசு பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டும் என்பதேநம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்: சுபகோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puli thevar, Tenkasi