முகப்பு /தென்காசி /

தென்காசி மக்களிடையே பிரபலமாகி வரும் “புட்டு ஐஸ்கிரீம்”! எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

தென்காசி மக்களிடையே பிரபலமாகி வரும் “புட்டு ஐஸ்கிரீம்”! எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

X
Puttu

Puttu icecream 

Tenkasi icecream | தென்காசியில் பிரபலமடைந்து வரும் புட்டு ஐஸ்க்ரீமை பொதுமக்கள் ஆர்வமாக சென்று சாப்பிட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

உணவு பிரியர்கள் வித்தியாச, வித்தியாசமாக சாப்பிட விரும்புகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புட்டு ஐஸ்க்ரீம் விருந்தாக அமையும் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. புட்டு தெரியும், ஐஸ்கிரீம் தெரியும், அதென்ன புட்டு ஐஸ்கிரீம்? இந்த வித்தியாசமான புட்டு ஐஸ்கிரீமை சாப்பிட வேண்டும் என்றால் தென்காசிக்கு தான் வரவேண்டும்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருக்கும் இத்தாலியன் ரெஸ்டாரண்டில் செய்யப்படும் புட்டு ஐஸ்கிரீம் மக்களிடையே மிகவும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புட்டு தயார் செய்யும் குழாயில் ஐஸ்கிரீம் ஃப்ரீஷ் ஆக செய்யப்பட்டு அதில் நட்ஸ் எல்லாம் போட்டு கொடுத்தால் அது தான் புட்டு ஐஸ்கிரீம். புட்டு ஐஸ்கிரீம் திகட்டாமல் இருப்பதற்கு எக்கச்சக்கமான நட்ஸ் வகைகள் சேர்க்கப்படுகின்றது. நொறுக்கிய கடலை மிட்டாய், டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை, பாதாம், முந்திரி, ஜேம்ஸ் மிட்டாய்கள் என எக்கச்சக்கமான பொருட்களை சேர்க்கின்றனர்.

புட்டு குழாயில் எப்படி தேங்காய் பூவும் புட்டுக்கு மாவு சேர்க்கின்றோமோ அதேபோல் புட்டு ஐஸ்கிரீமில் கலந்து வைத்த நட்ஸ் மற்றும் ஐஸ்கிரீமை ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று லேயராக வைத்துக் கொள்கின்றனர். மூன்று பெரிய ஐஸ்கிரீம் ஸ்கூப் வெண்ணிலா ஸ்ட்ராபெர்ரி பிஸ்தா என ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்படுகின்றன. இதனை ஒரு நாள் வரை ஃபிரீஸ் செய்ய வேண்டும் அப்பொழுது சாப்பிடுவதற்கு புட்டு ஐஸ்கிரீம் தயார்.

மேலும் இதனை பரிமாறுவதற்கு கான்ப்ளக்ஸ் நட்ஸ் என தட்டில் பரப்பி கொடுக்கின்றனர் . அதன் மேல் புட்டு ஐஸ்கிரீமை வைத்து ப்ளேவர்கள் சேர்க்கப்படுகின்றன. ஸ்ட்ராபெரி ஆரஞ்சு போன்ற கிரஷ்களை மேலே ஊற்றுகின்றனர். இவை அனைத்தும் மேலே பரப்பிய பின்னர் ஐஸ்கிரீமை பார்ப்பதற்கு வானவில் போன்று தெரிகிறது. அதன் மேல் வண்ண வண்ண ஜெம்ஸ் மிட்டாய்களையும் தூவுகின்றனர். மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது திகட்டாமல் இருக்க இடையில் சாப்பிடுவதற்காக வேப்பர்ஸ்களும் மேலே சாக்லேட் ஊற்றி சுற்றி வைத்து பரிமாறப்படுகின்றது.

அதோடு முடியாமல் அதற்கு மேல் சிறிதாக நறுக்கிய ஸ்ட்ராபெரி பழங்களும் தூவப்படுகிறது. இப்படி செய்தால் புட்டு ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக சென்று ருசித்து வருகின்றனர்.

First published:

Tags: Ice cream, Local News, Tenkasi