தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படுகிறது.
13.02.2023, 14.02.2023 மற்றும் 15.02.2023 ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் இன்று(06.02.2023) முதல் 10.02.2023 வரையிலான 5 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை நேரில் பார்வையிடலாம்,
மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi