தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை புரிந்து பல நல்ல திட்டங்களை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உலக மாற்றித்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற விழாவில், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடமாடும் மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குசிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் சிறந்த முறையில் செய்திருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு சிரமமின்றி ஏறி இறங்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை.. கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் சேவைகள் என்ன?
இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருக்கும் இந்த வாகனத்தின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை செய்து வருகின்றனர். இதன் மூலமாக தசை பயிற்சி அளித்தல், செயல்திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, விளையாட்டு முறையில் சிகிச்சை அளிப்பதற்கான போதிய உபகரணங்கள் மற்றும் வசதியுடன் இந்த வாகனம் இயங்கி வருகிறது.
இதுகுறித்து பயனாளர்கள் கூறுகையில், “ என் மகன் பெயர் சரண், நாங்கள் தென்காசியில் குடியிருந்து வருகிறோம். என் மகன் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். பல சிகிச்சை மையங்களுக்கு அழைத்து சென்றும் எந்த பயனும் அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனத்தின் மூலம் மிகுந்த பயன் அடைந்துள்ளோம். முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. இந்த நடமாடும் சிகிச்சை அளிக்கும் வாகனம் இருப்பதால் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது” என்றனர்.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Tenkasi, World Disability Day