முகப்பு /தென்காசி /

அவ்வையார் விருதுக்கு தென்காசி மக்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!

அவ்வையார் விருதுக்கு தென்காசி மக்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!

அவ்வையார் விருது

அவ்வையார் விருது

Tenkasi District News : தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று  மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோ ருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சத் திற்கான காசோலை மற்றும் சான்றிதழ், சால்வை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards.tn.gov.in) வழியாக வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும். அவ்வையார் விருதுக்கான கருத்துருக்களை அனுப்புபவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும்.

இதையும் படிங்க : குற்றாலம் அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சுற்றுலா பயணிகள் மீது விழுந்த உடும்பு..

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுவபராக இருத்தல் வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi