தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் தென்னை மரங்களுக்கும் வாழை மரங்களுக்கும் நடுவே மேலப்பாவூரின் குளத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கோவில் தான் ஸ்ரீ நரசிம்மர் பெருமாள் கோவில்.
அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் தென்காசிக்கு வந்தால் இந்த கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். சமீபமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை புரிந்த போது அவரின் மனைவி இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான மரத்தின் அடியில் மேலப்பாவூர் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலையும் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் அருகில் இருக்கும் விநாயகர் சிலை 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த வழிதான் நரசிம்மர் தீர்த்த வளம் செல்லும் பாதையாகும்.மேலும் சுவாதி நட்சத்திரத்தில் நடக்கும் பூஜைகளில் ஹோமங்கள் செய்யப்பட்ட பின்பு நரசிம்மருக்கு அபிஷேகங்கள் செய்யப்படும். அதன் பின் நரசிம்மர் நீர் வளம் செல்வது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
தென்னை மற்றும் வாழை மரங்களுக்கு நடுவில் அமைதியான சூழலில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கும் இந்த கோவில் நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியையும் வேண்டியதை நிறைவேற்றும் இடமாகவும் நிச்சயம் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் நடக்கும் பூஜையில் தவறாமல் கலந்து கொண்டு நரசிம்மர் அருளை பெறுங்கள்.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi