ஹோம் /தென்காசி /

மீண்டும் ஊரடங்கா? குமுறும் தென்காசி சிறு வியாபாரிகள்!

மீண்டும் ஊரடங்கா? குமுறும் தென்காசி சிறு வியாபாரிகள்!

X
குற்றாலம்

குற்றாலம் மக்கள் கருத்து

Tenkasi | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலைகளில் இருந்து மூலிகைகள் கலந்த தண்ணீர் அருவியாக விழுவதால் அதனை குளிக்கும் மக்களுக்கு கொரோனா வராது என்று மக்கள் ஒருவர் கூறியது அனைவரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi | Tirunelveli

இந்தியாவில் கொரோனாவின் புதிய வைரஸான BF 7 மற்றும் BA 5 போன்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து தொற்று பரவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலையிலிருந்து மூலிகைகள் கலந்து வரும் அருவிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது இதில் குளித்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த பகுதி மக்களிடம் கொரோனா தொற்று பரவுவதில் அச்சத்தில் இருக்கின்றனர்

கொரோனா தொற்று காலத்தில் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சீசன் நேரத்திலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தங்களது வியாபாரம் பெரிதளவு நஷ்டத்தில் ஓடியது என்று குற்றாலத்தின் அருகில் கடைவைத்திருக்கும் சிறுவியாபாரிகள்தெரிவித்தனர்.

அதேபோல் தற்போதும் கொரோனா மீண்டும் வந்தால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும் என்று வருத்தம் தெரிவித்தனர்.

First published:

Tags: Corona, Courtallam, Local News, Tenkasi