ஹோம் /தென்காசி /

குற்றாலத்தில் அதிகம் கிடைக்கும் குறிஞ்சி காய்... அடடே இத்தனை நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே!

குற்றாலத்தில் அதிகம் கிடைக்கும் குறிஞ்சி காய்... அடடே இத்தனை நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே!

X
தென்காசி

தென்காசி குறிஞ்சி காய்

Tenkasi courtallam kurinji kaai | குறிஞ்சி காய் குற்றால மலைகளில் இருந்து எடுக்கப்படுகின்ற ஒரு மூலிகை காயாகும். இதனை பயன்படுத்துவதை மூலம் பல நோய்களுக்கு மருந்தாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் இயற்கையாக மலைகளில் இருந்து வரும் மூலிகை தண்ணீரில் குளிப்பதற்காக பல இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர்.

மேலும் குற்றாலத்தில் விழும் அருவிகளின் தண்ணீர் மூலிகைகள் கலந்து வருவதால், இதில் குளித்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை அதேபோல இங்கு அமைந்திருக்கும் கடைகளில் அதிக மூலிகை பொருட்களையும் காண முடியும்.

குறிஞ்சி காய் என்பது காடுகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு விதமான மூலிகை பொருளாகும். இதனை உடைத்து அதில் உள்ளிருக்கும் பகுதியை தேங்காய் எண்ணெயில் கலந்து முகப்பரு தேமல் கால் வெடிப்பு கால் ஆணி போன்றவற்றிற்கு போன்று நோய்களுக்கு பயன்படுத்தினால் எளிதில் சரியாகும்.

குறிஞ்சி காய் குற்றால மலைகளில் இருந்து எடுக்கப்படுகின்ற ஒரு மூலிகை காயாகும் இதனை பயன்படுத்துவதை மூலம் தோல்களில் இருக்கும் நோய் மற்றும் கால்களின் ஆணி கால்களில் பித்த வெடிப்பு கால்களில் வெடிப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும்.

மேலும் இதில் வேதியல் பொருட்கள் கலக்காமல் இயற்கையான முறையில் இருப்பதால் மக்கள் இதனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi