தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அர்ஃபத் நிஷா. இவர் கடந்த நான்கு வருடமாக மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கியுள்ளார்.
பியூட்டி பார்லர் என்றாலே அனைவருக்கும் தெரிந்தது தலை முடி வெட்டுவது முகத்தை அழகுப்படுத்துவது கால் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவது போன்றவைகள் தான் இருக்கும் . நிஷாவோ அதற்கு ஒரு படி மேலாக போய் நம் தலையில் இருக்கும் பொடுகுகை சுத்தம் செய்து கொடுக்கும் ஒரு ட்ரீட்மென்டையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய நிஷா, “ பொதுவாக நம் வீட்டில் பாட்டி அம்மா தான் இந்த வேலையை செய்வார்கள். தற்போது அனைவரும் வேலை பளு காரணமாக தங்களது தலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் தற்போது அதற்குக் கூட ட்ரீட்மென்ட் வந்துவிட்டது. முதல் முறை செய்யும் போதே 90% பேருக்கு பொடுகு பிரச்சனை காணாமல் போய் விடுகிறது. மேலும் இந்த முறையில் எந்தவித ரசாயனங்களும் பயன்படுத்தாமல் கைகளால் செய்யப்படுவதால் இதில் எந்தவித பாதிப்பும் இல்லை என மக்கள் நம்பி வருகின்றனர் என்றும் கூறுகிறார்.
இதற்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ட்ரீட்மென்ட் இருக்கின்றதாம். மேலும் இந்த சுற்று வட்டார பகுதியில் இதனை அதிக நபர்கள் செய்யவில்லை என்பதால் மக்கள் இவரை தேடி வருகின்றனர் என்று கூறுகின்றார். மேலும் பெண்கள் பியூட்டிசன் படித்துவிட்டு அழகு சாதனங்களை கொண்டு அழகு செய்வதை தொழிலாக கொண்டாலும் தனக்கென தனித்துவமான ஒன்றை செய்யும் போது தான் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty parlour, Dandruff, Kadayanallur Constituency, Local News, Tamil News, Tenkasi