ஹோம் /தென்காசி /

ரூ.70-க்கு கிடைக்கும் kitkat மில்க்‌ஷேக்... சங்கரன்கோவில் வந்தா கண்டிப்பா ட்ரை பன்னுங்க...

ரூ.70-க்கு கிடைக்கும் kitkat மில்க்‌ஷேக்... சங்கரன்கோவில் வந்தா கண்டிப்பா ட்ரை பன்னுங்க...

X
கிட்கேட்

கிட்கேட் மில்க்ஷேக்

Tenkasi | சங்கரன்கோவிலில் ஜூஸ் கடையில் தயாரிக்கப்படும் கிட்கேட் மில்க்ஷேக் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

கிட்கேட் சாக்லேட்டை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். மேலே உள்ள சாக்லேட் மற்றும் உள்ளே இருக்கும் மொறு மொறு wafers சுவையில் மெய் மறந்து போகலாம். இதை வைத்து மில்க் ஷேக் செய்து ஜில்லென்று கொடுத்தால், ஆஹா இதுவல்லவா சொர்க்கம். இதை தான் செய்து வருகிறார் தென்காசியில் உள்ள இளைஞர் சங்கரநாராயணன்.

இந்த கடையில் எப்படி kitkat மில்க் ஷேக் தயார் செய்கிறார்கள் தெரியுமா? முதலில் ஃப்ரீசரில் வைத்து உறைந்த பாலை மிக்ஸியில் உடைத்து போட்டுக் கொள்கின்றனர். அதன் மீது மூன்று ஸ்கூப் வெண்ணிலா ஐஸ் கிரீமும் போட்டுக் கொள்கின்றனர். அதன் பிறகு சாக்லேட் சிரப்பை ஊற்றுகின்றனர்.

அக்கவுண்டண்ட் டூ காபி ஷாப்... சங்கரன்கோவில் இளைஞரின் அசத்தல் முயற்சி

பின்னர் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் kitkat ஐ உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து மில்க் ஷேக் பதத்திற்கு வந்தவுடன் அதன் மேலே மீண்டும் ஒரு kitkat வைத்து சாக்லேட் சிரப் ஊற்றினால் குளுகுளு kitkat மில்க் ஷேக் தயாராகி விடுகிறது. இதன் விலை 70 ரூபாய் ஆகும். மேலும் kitkat பிரியர்கள் இதை விரும்பி அருந்தி வருகின்றனர்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi