முகப்பு /தென்காசி /

மின் கட்டண உயர்வு பிரச்சினை.. தென்காசியில் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

மின் கட்டண உயர்வு பிரச்சினை.. தென்காசியில் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

தென்காசி

தென்காசி

Tenkasi current issue | மின் கட்டண உயர்வு பிரச்சினைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் முழுவதும் வரும் 20ம் தேதி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பீக்ஹவர் கட்டண உயர்வு அறிவித்துள்ளது ஆனால் டி ஓ டி மீட்டரை மின்வாரியம் நிறுவும் வரை 10 சதவீத குறைப்பு சலுகை இருக்காது எனவே டிஒடி மீட்டர் பயன்படுத்தும் வரை எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு பீக்ஹவர் கட்டணத்தை வசூலிக்க கூடாது பருவ காலங்களில் செயல்படும்.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு நிலையான கட்டணத்தை வசூலிக்க கூடாது தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலையான கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு.

இதன் மூலம் மாவட்டத்தில் மர அரவை ஆலை, அரிசி ஆலை, கயிறு தயாரிக்கும் ஆலை,கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் ஆலை உள்ளிட்ட பல்வேறு சிறுகுறு உற்பத்தி ஆலைகள் ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளது எனவும் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Current cut, Local News, Tenkasi