முகப்பு /தென்காசி /

தென்காசியில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்.. உடனே கோழிகளுக்கு தடுப்பூசி போடுங்க மக்களே!

தென்காசியில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்.. உடனே கோழிகளுக்கு தடுப்பூசி போடுங்க மக்களே!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi campaign | தென்காசி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோயிலிருந்து கோழிகளை காக்க பிப்ரவரி 01 முதல் 14 வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோழிக்கழிச்சல் நோய் என்பது கோழிகளை தாக்கும் ஒருவிதமான வைரஸ் நோய், இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்பதால் தடுப்பூசி போடுவதன் மூலம் தான் இந்த நோயை தடுக்க இயலும்.

தென்காசி மாவட்டத்தில் கோழிக் கழிச்சல் தடுப்பு முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 01 முதல் 14 முடிய இரண்டு வாரங்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் கோழிக்கழிச்சல் நோயிலிருந்து கோழிகளை காப்பாற்ற தடுப்பூசி போடப்படும். வருடத்தின் அனைத்து நாட்களும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களில் வாராவாரம் தடுப்பூசி போடப்படும். வருடம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து கிராமங்களிலும் இந்த தடுப்பூசி போடப்படும்.

பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு கோழிக்கழிச்சல் நோயிலிருந்து தங்கள் கோழிகளை காப்பாற்றி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

First published:

Tags: Local News, Tenkasi, Vaccination