முகப்பு /தென்காசி /

தென்காசியில் வெறிநாய் கடி தடுப்பூசி பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தென்காசியில் வெறிநாய் கடி தடுப்பூசி பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு முகாம்

தென்காசி அரசு பள்ளி மாணவர்களிடம் வெறிநாய் கடியில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் துண்டு பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பேருந்துக்காக காத்திருந்த மாணவனை வெறி நாய் ஒன்று கடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனலிக்காமல் மாணவன் உயிரிழந்தார். அதை தொடர்ந்து சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறி நாய் கடிக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் துண்டு சீட்டு மூலம் வெறி நாய் மற்றும் பூனை கடியின் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அறிவுறுத்தல் படி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனை மற்ற செல்லப்பிராணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சரியான நேரத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi