முகப்பு /தென்காசி /

200 நாடுகளின் கொடியை 2 நிமிடத்திற்குள் அடையாளம் கண்டு சொல்லி அசத்தும் தென்காசி சிறுமி..!

200 நாடுகளின் கொடியை 2 நிமிடத்திற்குள் அடையாளம் கண்டு சொல்லி அசத்தும் தென்காசி சிறுமி..!

X
200

200 நாடுகளின் கொடியை 2 நிமிடத்திற்குள் அடையாளம் கண்டு சொல்லி அசத்தும் தென்காசி சிறுமி

Tenkasi News : தென்காசி மாவட்டம் செவல் குளத்தில் உள்ள சிறுமி நடாஷா இரண்டு நிமிடத்திற்குள் 200 நாடுகளின் கொடிகளை வைத்து நாட்டின் பெயரை சரியாக சொல்லி அசத்துகிறார்.

  • Last Updated :
  • tenkasi, India

தென்காசி மாவட்டம் செவல் குளத்தில் உள்ள சிறுமி நடாஷா 2 நிமிடத்திற்குள் 200 நாடுகளின் கொடிகளை வைத்து நாட்டின் பெயரை சரியாக சொல்லிவிடுகிறார்.

பொதுவாக 10 நாடுகளின் கொடிளையே நம்மால் சரியாக அடையாளம் காண்பதே சிரமமாக இருக்கும். ஆனால்,தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செவல்குளம் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் - ஹெப்சிபா தம்பதியரின் 6 வயது சிறுமி நடாஷா ஒரு நிமிடம் 52 வினாடியில் 200 நாடுகளின் கொடிகளை வைத்து நாட்டின் பெயரை மிகச்சரியாக சொல்லி விடுகிறார்.

இந்த சாதனைக்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற விண்ணப்பித்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், இதனை எல்.கே.ஜியில் இருந்து பயிற்சி செய்து வருவதாகவும், அப்போது 10 நாட்டு கொடிகளை வைத்து நாட்டின் பெயரை மனப்பாடமாக சொல்லி வந்ததாகவும் தற்போது அது 200 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார் நடாஷாவின் தாய்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பள்ளி ஆண்டு விழாவிற்காக பல நாடுகளின் கொடிகளின் பெயரை மனப்பாடம் செய்ததாகவும் அப்பொழுது நடாஷா மட்டும் குறைவான நேரத்தில் அநேக நாட்டின் கொடிகளை சரியாக கூறியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்டில் பதிவு செய்து கேர்ள் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார் நட்டாஷா. விடாமுயற்சி மற்றும் பயிற்சி செய்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று 2ம் வகுப்பு படிக்கும் நட்டாஷா நமக்கு நிரூபித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tenkasi