முகப்பு /தென்காசி /

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா.. அப்போ இதை கவனிங்க!

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா.. அப்போ இதை கவனிங்க!

X
தென்காசி

தென்காசி இலவச பயிற்சி முகாம்

Tenkasi news | தென்காசியில் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபப்டவுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலுபவர்கள், தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புல சேர்வதற்கு கீழே, இருக்கிற இந்த லிங்க் https|bitly:3NDU95 மூலமாக உங்களோட சுயவிபரங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க | கோடை வெயிலை தணிக்க குற்றாலத்துக்கு கிளம்பிட்டீங்களா.. இதை பார்த்துட்டு போங்க!

உங்களின் சுய விபரங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்த பின்பு புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி இலையோ 04633-213179 தொடர்பு கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்புகளின் வாயிலாக TNPSC, SSC , TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Central Government Jobs, Competitive Exams, Local News, Tenkasi