தென்காசி மாவட்டம் ராமநதி அரசு மீன்பண்ணையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 314 கோடியே 89 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக்குளங்கள். பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்கள் போன்ற கட்டடங்களை திறந்து வைத்தார்.
மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம், ராமநதி அணையின் நீர்த்தேக்க வளாகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளுக்கான சினை மீன் வங்கியைதமிழ்நாடு முதலமைச்சர்காணொலி காட்சி மூலம் 15.05.2023 அன்று காலை 11.00 மணியளவில் திறந்து வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 1 கோடி நுண்மீன் குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் தரமான சினை மீன் குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
பண்ணையில் நடைபெற்ற விழாவில்தென்காசி சட்டமன்ற உறுப்பினர்S. பழனி நாடார், கடையம் ஒன்றிய பெருந்தலைவர் V.S.செல்லம்மாள் முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுதா சின்னத்தம்பி புஷ்ரா ஷப்னம், உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருநெல்வேலி ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர், தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர், மீன்பிடி திட்ட உபகோட்டம், திருநெல்வேலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi