முகப்பு /தென்காசி /

ஒரு கிலோ தக்காளி ரூ.2.. வேதனையில் தென்காசி விவசாயிகள்..!

ஒரு கிலோ தக்காளி ரூ.2.. வேதனையில் தென்காசி விவசாயிகள்..!

X
விவசாயிகள்

விவசாயிகள் கவலை

Tenkasi farmers | தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் அன்னம்மாள் பாட்டி விளைவித்திருக்கும் தக்காளி தோட்டத்தில் விளையும் தக்காளி ரூ.2 முதல் ரூ.10 வரை தான் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் அன்னம்மாள் பாட்டி விளைவித்திருக்கும் தக்காளி தோட்டத்திற்கு தான் வந்திருக்கிறோம்.

தக்காளிகள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட தக்காளி எங்கிருந்து வருகிறது அதை விளைய வைப்பதற்கான பருவநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான பதிவு தான் இது. தக்காளி விளைவிப்பதற்கு மூன்று மாதங்கள் ஆகுமாம். தக்காளி விளைச்சலுக்கு கோடை காலம் தான் ஏற்ற காலமாம். வெயில் இல்லாமல் பனி மழை போன்ற காலங்களில் தக்காளி பயிரிட்டால் தக்காளிகள் கருகிவிடுமாம். தை மாதத்தில் வெயில் அடிப்பதற்கு மாறாக தற்போது தென்காசி மாவட்டத்தில் சாரல் மழையும் பனி பொழிவும் இருந்து வருவதால் தக்காளி சரியாக விளையவில்லை.

ஒரு கிலோ தக்காளி இரண்டு ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை தான் போகும். இடைத்தரவர்கள் அதனை விலையை உயர்த்தி விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் அன்னம்மாள்.ஏழு நாட்களுக்கு ஒரு முறை தக்காளி செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மேலும் தினமும் களை வெட்ட வேண்டும் மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உப்பும் உரமாக வைக்க வேண்டும் மேலும் யூரியா போன்ற உரங்களும் பயன்படுத்துகின்றேன் என்று பாட்டி அன்னம்மாள் தெரிவித்தார்.மீண்டும் இந்த தக்காளி விவசாயம் லாபகரமாக இருக்கின்றதா என்று கேட்டதற்கு அவரின் பதில் என்ன என்று நீங்களே கேளுங்களேன்.

தற்போதைய ஆட்சி காலத்தில் விலை தாங்கள் தீர்மானிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் அண்ணமார் பாட்டி.

மேலும் தக்காளி போன்ற காய்கறிகளை பயிரிட்டு நீங்களே சந்தைப்படுத்துவதாக இருந்தால் மட்டுமே இந்த விவசாயம் லாபகரமாக இருக்கும் என்றும் இதனை நீங்கள் இடைத்தரகரிடம் விற்கும் பொழுது அவர்கள் கூறிய விலைக்கு நாம் கொடுக்க வேண்டியதாக இருக்கும் மேலும் அதனை அவர்கள் அதிக லாபமும் வைத்து பின்னர் விற்பனை செய்து வருகின்றதாக அன்னம்மாள் தெரிவித்தார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தினால் லாபம் நிச்சயம் என்கிறார் அன்னம்மாள்.

First published:

Tags: Agriculture, Farmer, Local News, Tenkasi