வயல்வெளிகள் சாலையோரங்கள் என நாம் காணும் இடங்களில் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒரு அற்புத மூலிகை தான் நாயுருவி.
பாறையின் இடுக்கிலும் வேர் விட்டு மூளைக்கும் தன்மையுடையதால் இதற்கு உள்ளது. இந்த நாயுருவி மூலிகையின் இலைகள் வேர்கள் மற்றும் இதன் கதிர்கள் என அத்தனை பாகமும் மனிதருக்கு அளவற்றநன்மையை தருகிறது.
இந்த மூலிகையின் ஆபார ஆற்றல் மற்றும்நன்மைகள் குறித்துநமக்கு எடுத்துரைக்கிறார் தென்காசி மாவட்டம் கீழப்பாவுரை சார்ந்த விவசாயி மாரியப்பன், “நாயுருவிச் செடியில் இருக்கும் கதிரை கையில் எடுத்து தேய்த்தவுடன் அரிசி வரும் அதனை ஒரு கை அளவு சாப்பிட்டு மலை ஏறினால் பசித்தன்மை இருக்காது.
மேலும் காடுகளிலும் குகைகளிலும் வாழும் சித்தர்கள் பசி இல்லாத உடல் தெம்பாக இருக்க நாயுருவி செடியில் உள்ள கதிரில் இருக்கும் அரிசியை சேகரித்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதன் மூலம் நாட்கள் பல ஓடினாலும் பசி எடுக்காது அதே போல் உடல் தெம்பாகவும் இருக்கும் என்கிறது சித்த மருத்துவ நூல்கள்.
ALSO READ | வீட்டில் இருந்தே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி.. தெளிவாக விளக்கிய தென்காசி விவசாயி!
அதேபோல் சித்தர்கள் அஷ்டகர்ம மூலிகை எனப்படும் இந்த சென் நாயுருவி மூலிகை மூலமாகத்தான் உடல் சோர்வு பசி நீங்கி காடு மலைகளில் சுற்றித்திரிந்தார்கள். இதனால் இந்த செந்நாயுருவிக்கு முனிவர்களுக்கு எல்லாம் முனிவர் என பொருள்படும் வகையில் மாமுனி என்ற பெயரும் உண்டு.”என்ற சித்தர்களின் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்தார் மாரியப்பன்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi