முகப்பு /தென்காசி /

ஓவன் இல்லாமல் பீட்சா செய்வது எப்படி? தென்காசி பேக்கரியின் இந்த ட்ரிக்க பாலோ பண்ணுங்க!

ஓவன் இல்லாமல் பீட்சா செய்வது எப்படி? தென்காசி பேக்கரியின் இந்த ட்ரிக்க பாலோ பண்ணுங்க!

X
Wood

Wood fire pizza 

Tenkasi Italian Bakery & Restaurant | வுட் ஃபயர் பீட்சா என்றால் பீட்சாவை தயார் செய்த பின்பு ஓவனில் வைக்காமல் எரியும் நெருப்பு மீது மெதுவாக வைத்து குக் செய்யும் முறை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

பொதுவாக பீட்சா என்றாலே பெரும்பாலான கடைகளில் ஓவன் பயன்படுத்தி தான் குக் செய்து தருகிறார்கள். ஆனால் கடையநல்லூரில் இருக்கும் இட்டாலியன் ரெஸ்டாரண்டில் வுட் ஃபயர் பீட்சா தயார் செய்து வருகின்றனர். வுட் ஃபயர் பீட்சா என்றால் பீட்சாவை தயார் செய்த பின்பு ஓவனில் வைக்காமல் எரியும் நெருப்பு மீது மெதுவாக வைத்து குக் செய்யும் முறை. ஓவனில் டக்குனு தயாராகும் பீட்சா இதில் கொஞ்சம் தாமதமாக தான் தயாராகும். ஆனால் அந்த வுட் இன் வாசம் அதில் கலந்து சாப்பிடும் போது கூடுதல் சுவையுடன் இருக்கும் என்கின்றனர் இந்த கடையின் கஸ்டமர்ஸ்.. அப்படி என்ன அதில் ஸ்பெஷல் என்று தெரிந்து கொள்ள ஸ்கூட்டியை எடுத்துக்கொன்டு நேரா அங்கேயே வந்துட்டேன்.

அவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு குக்கிங் ஏரியா உள்ள வந்து பாத்தா இந்த இட்டாலியன் ரெஸ்டாரண்டில் அவங்களே பீட்சா பேஸ்சையும் ரெடி பண்றாங்க. அவங்க செஞ்ச பேஸ் மேல பீட்சா சாஸ் பரப்புறாங்க. அதன் பிறகு பொடியாக நறுக்கிய குடைமிளகாய் அதன் மேலே பரப்பி கொள்கின்றனர். பின்பு கொஞ்சம் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்துக்கிறாங்க. நல்லா ஃப்ரை செய்த சிக்கனையும் அதன் மேலே பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். அதன் மேலே பீட்சா சாஸ் இங்கேயும் போட்டு எக்கச்சக்கமான சீஸ் கலையும் குற்றால சாரல் மாறி பரபரபரன்னு தூவறாங்க..அதற்கு மேல் ஆர்கானோ மற்றும் சில்லி ஃப்ளாக்சையும் காரத்திற்கு சேர்த்து அதன் மேலே olives ஐ அடுக்கிக் கொள்கின்றனர்.

இப்படி பீட்சா ரெடியானதும் அதை வுட் ஃபயர் பீட்சா மேக்கருக்குள் வைக்கின்றனர். ஒரு புறம் நெருப்பு எறிய அந்த நெருப்பிலிருந்து வரும் சூட்டிலேயே பீட்சா வேகவைக்கிறாங்க. இது கொஞ்சம் லேட் ஆனாலும் டேஸ்டு அள்ளும் என்று இந்த கடை உரிமையாளர் கூறுகிறார்.மேலும் பீட்சாவை கொஞ்ச நேரத்திற்கு பிறகு சுற்றி வைக்கப்படுகிறது அப்பொழுதுதான் எல்லா சைட்லையும் சமமாக குக் ஆகுமாம். சுட சுட வுட் ஃபயரில் இருந்து எடுத்த பீட்சா மேல ஆலிவ் ஆயில் spread செய்து வாடிக்கையாளர்களுக்கு serve செய்யப்படுகிறது. மெதுவாக தீயில் வாட்டி எடுக்கும் பீட்சா என்பதால் அதன் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும் என்று இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Local News, Tenkasi