முகப்பு /தென்காசி /

பீடி தொழிலை கைவிட்டு கைவினை பொருட்கள் தயாரிப்பு.. அசத்தும் தென்காசி பெண்கள்!

பீடி தொழிலை கைவிட்டு கைவினை பொருட்கள் தயாரிப்பு.. அசத்தும் தென்காசி பெண்கள்!

X
பீடி

பீடி தொழிலை கைவிட்டு கைவினை பொருட்கள் தயாரிப்பு

Handicrafts Business | பீடி சுற்றும் தொழிலை கைவிட்டு கைவினை பொருட்கள் தயாரித்து அசத்தும் தென்காசி பெண்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் தமிழக அரசு மற்றும் SIPPCO சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து அப்பகுதியில் இருக்கும் பெண்களுக்கு மூங்கில் வைத்து மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் கருத்தரங்கை நடத்தியது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர். பொதுவாக செங்கோட்டை பகுதியில் மூங்கில் வைத்து செய்யக்கூடிய கைவினைப் பொருட்கள் அதிகம் விற்பனையாகும் இடம் மற்றும் தமிழகம் முழுவதும் இங்கிருந்துதான் மூங்கில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் அதை தயாரிப்பதற்கான போதிய ஆட்கள் இல்லாததால் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையாகிவிட்டது. அதற்கு ஒரு விடிவெள்ளியாக வந்தது தான் நபார்டு மற்றும் சிட்கோ நிறுவனத்தால் இணைந்து நடத்தப்படும் பெண்களுக்கான 15 நாள் ஒர்க் ஷாப்.

அதனைத்தொடர்ந்து விஸ்வநாதபுரத்தில் 30 பெண்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மூங்கில் பிரம்பினால் செய்யக்கூடிய கைவினைப் பொருட்களை 15 நாள் ஒர்க்ஷாப் மூலம் கற்றுக் கொடுத்தனர்.

பொதுவாக இப்பகுதியில் இருக்கும் பெண்கள் பீடி ஓட்டும் தொழில் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர் இதற்கு மாறாக மூங்கிலால் செய்யக்கூடிய மதிப்பு கூட்டும் பொருட்களை கற்றுக் கொடுத்து விற்பனை செய்யவும் வழிகாட்டி கொடுத்தது. பெண்கள் இடையே ஒரு விடியலை காண்பித்தது போல இருந்தது என்று இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர். பிரம்பின் நாரை பயன்படுத்தி 16 பொருட்கள் தயார் செய்வதற்கான வழிமுறைகள் இந்த வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்டது. பொக்கே கொடுப்பதற்கு பயன்படுத்தும் கூடை, பல கூடை, பெட்டிகள், பிளவர் வாஷ், அலங்காரப் பொருட்கள், சாதம் வடிக்கும் தட்டு, பல வகையான பொருட்களை இவர்கள் தயார் செய்வதற்கு கற்றுக் கொண்டு வருகின்றனர்.

மேலும் சுற்றுவட்டார பகுதியில் இதனை விற்பனை செய்வதற்கான கடைகளையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் இவர்கள் தயாரிப்பு செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தும் இந்த வகுப்பில் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதி பெண்கள் ஒரு நாள் முழுக்க பீடி சுற்றி சம்பாதிக்கும் காசை ஒரு கூடை 2 மணி நேரம் செலவு செய்து பின்னுவதன் மூலம் எளிதில் அதிக வருமானம் ஈட்டலாம் என்று இந்த வர்க்‌ஷாப்பில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்பு கைவினை பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகள் கைவினைப் பொருட்கள் செய்யும் முருகனால் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த சுற்று வட்டார பகுதியில் முருகன் மட்டுமே இந்த கைவினை பொருட்களை தயார் செய்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக அவர் கற்றுக் கொடுத்த பெண்களும் இந்த கைவினைப் பொருட்களை தயார் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். 15 நாள் ட்ரைனிங் முடிந்தவுடன் கைவினை பொருட்கள் செய்ய கற்றுக்கொண்ட 30 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதனை சந்தைப்படுத்துபவர்கள் கடைகளுக்கு சென்று கேட்டபோது இதில் பெரிய லாபத்தை இல்லை என்றாலும் இந்த பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அதை விற்பனை செய்து வருவதாக தென்காசியை சேர்ந்த கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். பீடி சுத்தி தொழில் செய்த பெண்கள் தற்போது சுய தொழில் செய்யும் சிங்கப்பெண்களாக மாறிவிட்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi