தென்காசி மாவட்டத்தில் அடுத்த வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு சில நாட்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்ஜய் மகாபத்ரா கூறியுள்ளார். அதேபோல் மழையை பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தாலும் தற்போது வெயிலின் தாக்கம் முன்பை விட அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அடுத்த வாரங்களில் 36 இல் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தென்காசி மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக குற்றாலம் இருந்தாலும் தற்போது அருவியில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.
குற்றால அனைத்து அருவிகளிலும் நீரின்றி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளுமையான காற்று வீசினாலும், மதிய நேரங்களில் குறிப்பாக 12 இருந்து 3 மணி வரை அனல் காற்றே வீசுகிறது. மேலும் தென்காசி மாவட்டத்தில் அடுத்த வாரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் வேளையில் தென்காசி மாவட்டத்தில் மழையும் வெயிலும் மாறி மாறி வருவது மக்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi, Weather News in Tamil