ஹோம் /தென்காசி /

தென்காசிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா? - இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா!

தென்காசிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா? - இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா!

தென்காசிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

தென்காசிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

Tenkasi district speciality | தென்காசியை தமிழ்நாட்டில் 33 மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியை தமிழ்நாட்டில் 33 மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. முன்னர் காலத்தில், தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கு பகுதியில் உள்ள சிவபெருமானின் பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதை யாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.

அதனால் அவர்களுக்கு சிவபெருமானின் அருள்பெற வேண்டும் என்று தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுஉள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம்.

இதையும் படிங்க : தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு... காரணம் என்ன?

 தென் மண்டலத்தில் இருக்கும் காசி என்பதால் இந்த ஊரும் தென்காசி என்று பெயர்ப்பெற்றது. முன்னர் காலத்தில், சோழர்கள் புகழ் மங்கியும், பாண்டியர்களின் கை ஓங்கியும் இருந்தது. அக்காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.

இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் செழிப்பூட்டும் விவசாயத்திற்கு, சிற்றாறு மற்றும் அனுமன்நதியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் நீரே காரணம். மேலும் குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, இராமநதி அணைகளும் பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் 800 மேற்பட்ட ஊரணிகள் உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 65% மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ இருக்கிறது.

இதையும் படிங்க : தென்காசி அருகே பால் வியாபாரி 2 பேர் வெட்டி கொலை...

இயற்கை கட்சிகளுக்கும், பச்சைபசேளென பார்ப்போர் கண்களை கவரும் வண்ணம் இருக்கும் இடமே தென்காசி. மேலும் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமே இல்லை இப்பகுதியில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் இருக்கும் இப்பகுதி.

பழைய குற்றாலம், ஐந்தருவி, அகஸ்தியர் அருவி, மெயின் அருவி, போன்ற எண்ணற்ற அருவிகளும், அடவிநயினார் அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை போன்ற எண்ணற்ற அணைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.

சிவனின் மறுவடிமான நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரை சபை சடையானது இங்கே உள்ள திருக்குற்றால நாத சாமி கோவிலில் இருக்கிறது. சைவ வைணவ கடவுளின் ஒற்றுமையை காட்டும் வகையில் சங்கரநாராயணன் கோவில் அமைத்து உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு தறி தொழில் பிரதானமாக செய்யப்படுகிறது. தெருவுக்கு இரண்டு அல்லது மூன்று தறி வீட்டிலேயே அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் : சுபா கோமதி

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tenkasi