முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் வெளியீடு!

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் வெளியீடு!

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் வெளியீடு

Tenkasi district collector : தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களர் பட்டியலை . மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன் வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, “தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி தென்காசி மாவட்டத்தில் கீழ் கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

அதன்படி ஊரகப் பகுதிகளில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகரகப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு

உறுப்பினர்களிலிருந்து 5 உறுப்பினர்களும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதையும் படிங்க : தஞ்சையில் ட்ராபிக் சிக்னல் வைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்!

மேற்கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கானதேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் விவரங்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விபரத்தினை சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் 03.05.2023-க்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் 04.05.2023 அன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பரவலாக்கம் திட்டம் தயாரிப்பதற்கு தேவையான மாவட்ட அளவிலான வளஆதாரங்களை விபரங்களை சேகரித்தல் மற்றும் நாளைய தேதி வரையிலான விபரங்களை பெறுதல், மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான கொள்ளைகள், திட்டங்கள் தயாரித்தல் மற்றும் முன்னுரிமை அளித்தல், மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்த திட்டங்களை ஒருங்கிணைத்து மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பிளர்கள் மேற்கொள்வார்கள்” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருகுபத்மாவதி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமுத்துகுமார், தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான், மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால் மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திருராராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi