முகப்பு /தென்காசி /

மகளிர் தினத்தையொட்டி போட்டி போட்டுக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய தென்காசி பெண்கள்!..

மகளிர் தினத்தையொட்டி போட்டி போட்டுக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய தென்காசி பெண்கள்!..

X
Women's

Women's day in Tenkasi collectorate 

Thenkasi News | தென்காசியில் மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சமையல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை பெண்கள் வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் துணைவியார் ஹேமலதா பரிசுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற வரிகளுக்கு ஏற்ப மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இங்கு பணிபுரியும் மகளிரின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் ஹேமலதா, மகளிரை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படும் மகளிர் தினம் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.விழாவில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் செங்கோட்டை எஸ்.ஆர்.எம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Tenkasi