தென்காசி EC ஈஸ்வரன் பிள்ளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் பேசியதாவது, “கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர், பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். அதை நமது தெள்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் செய்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அப்போது ஆட்சி தலைவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி மாவட்ட அலுவலர், தியணைப்பு துறை, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து பேருந்துகளை ஆய்வு செய்தனர்.
வாகன ஓட்டுநர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது பத்திரமாகவும், கவனமாகவும் அழைத்துச்செல்லவேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தென்காசி வட்டாரப் போக்குவரந்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 பள்ளி, வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : கோவையில் வீட்டுமனை வாங்க போறீங்களா? இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!
அதுமட்டுமல்லாமல் வாகளத்தில் படிக்கட்டு, அவசர வழி, சீசிடிவி கேமரா, வேசுக்கட்டுப்பாட்டு கருவி உள்ளதா என்றும் மற்றும் முதறுதவி பெட்டியில் மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது. வாகனத்தின் முன்புறமும் மற்றும் பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர், ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு முன்பும், பின்பும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் உதவி மாவட்ட அலுவலர், தீயணைப்பு துறை சேர்ந்து பள்ளி வாகனத்தில் தீ ஏற்பட்டால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல், தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் இன்றைய தேதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு நேரடியாக செய்முறை விளக்கம் மூலம் காண்பிக்கப்பட்டு, மேற்படி அலுவலரால் அனைத்து ஓட்டுநர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த ஆய்வில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன், கண்ணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ராமசுப்பு மாவட்ட கல்வி அலுவலர், நாகசங்கர் துணை காவல் கண்காணிப்பாளர், பிரதீப்குமார் உதவி மாவட்ட அலுவலர், தீயணைப்பு துறை, மகாலிங்கம் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi