ஹோம் /தென்காசி /

குளிக்கிறத விடுங்க.. குற்றாலத்தில் இப்படி ஒரு அங்காடி தெரு இருக்கிறதே கவனிச்சிருக்கீங்களா?

குளிக்கிறத விடுங்க.. குற்றாலத்தில் இப்படி ஒரு அங்காடி தெரு இருக்கிறதே கவனிச்சிருக்கீங்களா?

X
குற்றாலம்

குற்றாலம் கடை தெரு

Courtallam stores | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிக்க செல்லும் மக்கள் குற்றாலத்தில் கிடைக்கும் மூலிகை பொருட்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi | Tirunelveli

ஏலக்காய், கிராம்பு, மூலிகை எண்ணெய் அங்காடிகள் என குற்றாலத்தில் ஒரு அங்காடி தெருவே இருக்கிறதே கவனித்தீர்களா?

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கு மக்கள் அதிக அளவில் வருகை தருவர். அதேபோல குற்றாலத்தில் கிடைக்கும் மூலிகை பொருட்களை வாங்குவதற்கும் அதிக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் பட்டை கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் சுத்தமானதாக கிடைப்பதால் மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.

கேரளா மாநிலத்தில் ஊத்துமலையில் இருந்து இந்த பொருட்களை இங்குள்ள சிறு வியாபாரிகள் இறக்குமதி செய்யகின்றனர். கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கிராம்பு எண்ணெய் எடுக்காமல் இருப்பதால் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் பயன்படுத்த முடியும்.

ஏலக்காயை ஊத்து மலையில் இருந்தும் வியாபாரிகள் இறக்குமதி செய்கின்றனர். அதேபோல் திராட்சையும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இங்கு மிளகு ஏலக்காய் கிராம்பு போன்றவை 140 ரூபாயிலிருந்து 160 ரூபாயில் அதாவது கொள்முதல் விலையிலேயே மிக குறைவாக கிடைப்பதால் மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். குற்றாலத்திற்கு பிரபலமான மூலிகைகள் நிறைந்த இயற்கை கூந்தல் எண்ணெய் இங்கு அதிகம் விற்பனை செய்யும் பொருட்களில் ஒன்றாகும்.

அந்த எண்ணெய் பாட்டிலில் வெட்டிவேர் உள்ளிட்ட பல மூலிகைகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்து அதை தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை முடி உதிர்தல் மற்றும் கருமையான கூந்தலை பெற முடியும் மேலும் என்று கூறுகின்றனர் வியாபாரிகள். இது உடல் உஷ்ணத்தையும் குறைக்க நல்ல ஒரு மூலிகையாக பயன்படும். குற்றாலத்திற்கு சென்றால் அறிவியல் நீராடி விட்டு வருவதோடு இது போன்ற கடைகளுக்கு ஒரு விசிட் அடிங்க.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi