முகப்பு /தென்காசி /

மஞ்சல் அருவியாக மாறிய செண்பகாதேவி நீர்வீழ்ச்சி.. குற்றாலத்தில் குதூகலம்!

மஞ்சல் அருவியாக மாறிய செண்பகாதேவி நீர்வீழ்ச்சி.. குற்றாலத்தில் குதூகலம்!

செண்பகதேவி அம்மன் நீர்வீழ்ச்சி

செண்பகதேவி அம்மன் நீர்வீழ்ச்சி

Tenkasi falls | பொதிகை மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அருவியில் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள குற்றால அருவிக்கு மேல் பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில்செண்பகா தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், 10 நாட்கள் திருவிழாவானது மலைப்பகுதியில் விமர்சையாக நடைபெற்ற நிலையில், செண்பகாதேவி அம்மன் கோவில் அருகே உள்ள செண்பகாதேவி நீர்வீழ்ச்சியில் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டு களித்த நிலையில், தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது அருவியில் மஞ்சள் உருண்டையை வீசி எரிந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது, அருவியின் ஒரு பகுதியே மஞ்சள் அருவி போல மாறியது.

அந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கழித்தனர். இந்த திருவிழாவின் போது, முற்றிலும் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என்பதற்காக ஏராளமான வனத்துறையினர் வழி நெடுகிலும் குவிக்கப்பட்டு வனப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Courtallam, Local News, Tenkasi