முகப்பு /தென்காசி /

கோடை வெயிலை தணிக்க குற்றாலத்துக்கு கிளம்பிட்டீங்களா.. இதை பார்த்துட்டு போங்க!

கோடை வெயிலை தணிக்க குற்றாலத்துக்கு கிளம்பிட்டீங்களா.. இதை பார்த்துட்டு போங்க!

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி

Courtallam falls | தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு பொதுமக்கள் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக வந்து செல்கின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் வறண்டு தண்ணீரின்றி பாறைகள் மட்டுமே காணப்படுகிறது.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் மெயின் அருவி ஐந்தருவி சிற்றருவி புலி அருவி செண்பகாதேவி அருவி பழைய அருவி ஆகிய அருவிகளில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நேரங்களாக கருதப்படும்.

கடந்த வாரத்தில் தென்காசி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, அதற்கு முன்னர் வரை தண்ணீர் இன்றி பாறை மட்டுமே தென்பட்ட குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க | கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் வசந்த உற்சவம்.. 

அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு மிதமான அளவில் குற்றாலத்தில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது முன்பை விட தண்ணீர் இன்றி வறண்டு அருவிகள் காணப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்து வந்த மழையால் குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்து விட்டது என்று மக்கள் பலரும் குற்றாலத்திற்கு வந்து குவிய தொடங்கினர். இந்த நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்கும் மெயின் அருவி பார்த்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Courtallam, Local News, Tenkasi