தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் பயிற்சி பெற்று காவல் துறை, டி.என்.பி.எஸ்.சி மற்றும் தேசிய திறனாய்வு ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் பாராட்டி கேடயத்தினை வழங்கினார்.
செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன்கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினார்.
தென்காசி மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி இரண்டாவதாக அமைந்துள்ளது. சென்னை அண்ணா நூலகத்தைப் போல இ.சி.ஈஸ்வரன்பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நூலகம் கட்டப்படவுள்ளது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய தேர்வாணைய பயிற்சி (SSC, Bank) வகுப்புகள் செங்கோட்டை நூலகத்தில் 25.05.2023 அன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
அந்தப் பயிற்சி வகுப்பில் 150 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. எனவே மாணவ, மாணவியர்கள் அந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற -23 மாணவ, மாணவியர்கள், குருப்-4 -தேர்வுகளில் வெற்றி பெற்ற -13 மாணவ, மாணவியர்கள் காவலர் தேர்வு 6 மாணவ, மாணவியர்கள் ரயில்வேத் தேர்வு -1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவியர்களுக்கு பரிசினையும், தேசிய திறனாய்வு தேர்விற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்டத்தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், இணைச்செயலாளர் செண்பக்குற்றாலம், விழுதுகள் சேகர், வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர், நூலகத்துறை கண்காணிப்பாளர் சங்கரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஆய்குடி ஜே.பி.கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், வெற்றி ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குநர் அருணாச்சலம், சாந்தி ஐ.ஏ.எஸ்.அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். சக்தி சங்கீதா அகாடமி நிறுவனர் நீலகண்டன், SMSS பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் திரு.ஜவஹர்லால் நேரு, செங்கோட்டை நூலகர் ராமசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi