முகப்பு /தென்காசி /

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற ஆட்சியர்!

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற ஆட்சியர்!

Tenkasi collector 

Tenkasi collector 

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியாின் நோ்முக உதவியாளா் (பொது) திரு.முத்து மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) திரு.ஜி.ராஜ மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.ஷேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: District collectors, Local News, Tenkasi