தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ம்வருவாய் தீர்வாயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன்24.05.2023 அன்று தொடங்கி 25.05.2023 மற்றும் 26.05.2023 ஆகிய தினங்கள் வரை கலந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு வருடமும் தாலுகாவில் வருவாய் கிராமங்களில் உள்ள கணக்குகளை முடிக்கும் நிகழ்வே இந்த வருவாய் தீர்வாயம் ஆகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்தின் கணக்குகளை சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடையநல்லூர் தாலுகாவில் என் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. கடையநல்லூர் தாலுகாவில் 263 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மீதமுள்ள பட்டா, உதவித்தொகை கேட்ட மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
வருவாய் தீர்வாய பயனாளிகள் 63 பேருக்கு நலத்திட்ட உதவிகள் முறையே 27 பயனாளிகளுக்கு ரூ.42,30,580 மதிப்பில் கணினிவழி இ-பட்டா, 25 பயனாளிக்கு ரூ.1,12,500 மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 5 பயனாளிகளுக்கு ரூ.1,24,740 மதிப்பில் 6 பயனாளிகளுக்கு கணினி பட்டாவும் என ஆகமொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.44,67,820 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறோம். உங்கள் குறைகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம். நீங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இரா.பேச்சியப்பன், உதவிஇயக்குநர், நிலஅளவைதுறை, கடையநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அ.சண்முகம், அலுவலக மேலாளர் ந.அழகப்பராஜா, ச.திருநாவுக்கரசு, தனிவட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), ரா.ராமசுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), பாலசுப்பிரமணியன், தனிவட்டாட்சியர் (நத்தம் நிலவரித்திட்டம், புளியங்குடி) ராமலிங்கம், தனிவட்டாட்சியர் (நத்தம் நிலவரித்திட்டம், கடையநல்லூர்) கண்ணன், தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர்நலம், தென்காசி), மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், வேளாண்மைத்துறை நல அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi