முகப்பு /தென்காசி /

தென்காசியில் புத்தகக் கண்காட்சி.... ஆர்வமுடன் புத்தங்களை வாங்கிச் சென்ற பள்ளி மாணவர்கள்

தென்காசியில் புத்தகக் கண்காட்சி.... ஆர்வமுடன் புத்தங்களை வாங்கிச் சென்ற பள்ளி மாணவர்கள்

X
புத்தகத்

புத்தகத் திருவிழா

Tenkasi | தென்காசி மாவட்டம் சுரண்டையில் 10 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் 10 நாள்கள் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புத்தகக் கண்காட்சி நான்காவது வருடமாக தொடர்ந்து சுரண்டையில் நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சிக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து அரசு பள்ளியில் இருந்தும் மாணவர்கள் வந்து தங்களுக்கு பிடித்த நூல்களை வாங்கிச்சென்றனர்.

புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி ஆகியவையும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களே பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் வண்ணங்களை அழகாக தீட்டி நேர்த்தியான படங்களை வரைந்தது கொண்டிருந்தனர்.

புத்தகத் திருவிழா

இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 47 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தி, பாரதியார், சுபாஷ் சந்திர போஸ் போன்ற முகமூடிகளை அணிந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை அவர்களுக்கு நீதிக்கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், ஈசாப் கதைகள், சீன தேச கதைகள், தெனாலிராமன் கதைகள், திருக்குறள் கூறும் நீதி கதைகள் அவர்களின் விருப்பப் புத்தகங்களை வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர்.

புத்தகத் திருவிழா

உடல் ஆரோக்கியம் மற்றும் டயட் குறித்த புத்தகங்களுக்கு தனியாக ஒரு ஸ்டாலில் போடப்பட்டிருந்தது. இந்த ஸ்டாலில் இதய நோய், மூட்டு வலி, உடல் எடையை குறைக்கும் ரகசியம் என பல புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தது.

புத்தகத் திருவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா ஸ்டாலில் எண்ணங்கள், தாட்ஸ் 365, வள்ளுவர் வழியில் ஆளுமை திறன் என பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழன் வரலாறுகள் கூறும் கதைகள் வரிசையில் சோழர்களின் கதை, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கல்கியின் பார்த்திபன் கனவு, வந்திய தேவனின் வாள் பற்றிய கதை, கம்பராமாயண தொகுப்பு, எட்டுத்தொகையில் இருக்கும் 8 தொகைகளுக்கும் தனித்தனியான புத்தகங்கள் இருந்தன. அதேபோல, ஆதித்த கரிகாலன், வேள்பாரி போன்ற சுவாரசியமான கதை தொகுப்புகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

மேலும் விவேகானந்தர் பற்றிய புத்தகங்கள், கார்ல் மார்க்ஸ், ikigai, உலகை வசீகரித்த 100 ஆளுமைக்கான புத்தகம், போராளிகளுக்கான புத்தகங்கள் என புரட்சியாளர்களின் புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

ஆங்கில புத்தகங்கள் வரிசையில் ஹாரி பாட்டர், சேத்தன் பகத் , ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருந்தது.

மேலும் குழந்தைகளுக்கான அக்பர் பீர்பால் கதை வித்தியாசமான புத்தக முகப்புடன் அமைக்கப்பட்டிருந்தது அனைத்து குழந்தைகளின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் குழந்தைகளுக்கு பிடித்த காமிக்ஸ் புக், சிண்ட்ரெல்லா புக், போன்ற பல புத்தகங்கள் புத்தக கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.

இந்த புத்தக கண்காட்சியில் நான் பார்த்தவரை இரண்டு புத்தகமல்லாத பொருட்கள் என்னை ஈர்த்தது. அது எதுவென்றால் குழந்தைகள் எழுதுவதற்கும் பழகுவதற்கான பலகை, மற்றும் mathematics clock இது இரண்டும் மிக வித்தியாசமாகவே இருந்தது.

மேலும் ஆட்சியர் கல்வி என்ற திட்டத்தின் கீழ் ஒரு ஸ்டால் போடப்பட்டிருந்தது. அதில் யுபிஎஸ்சி எக்ஸாம்களுக்கு தயார் செய்யும் புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன.

டிஎன்பிசி, குரூப் 4, எஸ் எஸ் சி, நெட், செட் போன்ற எக்ஸாம்களுக்கும் தயார் செய்வதற்கான புத்தகங்கள் இந்த ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்தன. அரசாங்க வேலைகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த ஸ்டாலில் உள்ள கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்து இவர்களின் whatsapp குரூப்பில் add ஆகி கொள்ளலாம்.

காண்போரை கவர்ந்த நையாண்டி மேளம், காவடி ஆட்டம்.. தஞ்சையில் மெய்சிலிர்த்துபோன பக்தர்கள்..!

மேலும் இவர்களுக்கு தனியாக facebook, instagram, youtube என பல வலைத்தள பக்கங்களும் இருக்கின்றன. அதில் நீங்கள் இலவசமாக இணைந்து போட்டி தேர்வுகளுக்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். இது போன்ற புத்தகக் கண்காட்சி நடந்தால் உங்கள் குழந்தைகளையும் தவறாமல் அழைத்துச் செல்லுங்கள். ஆயிரம் புத்தகங்களைப் பார்த்து, 100 புத்தகங்களை தொட்டு, பத்து புத்தகங்களை வாங்கட்டும்.

First published:

Tags: Local News, Tenkasi