முகப்பு /தென்காசி /

தென்காசி | அனுமந்தபுரி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சனிக்கிழமை பூஜை

தென்காசி | அனுமந்தபுரி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சனிக்கிழமை பூஜை

X
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் சிலை

Tenkasi | தென்காசி மாவட்டம் அனுமந்தபுரியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

1.5 அடி அதிசயம்... இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது. மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கேற்ப தென்காசி அனுமந்தபுரியில் 1.5 அடியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

தென்காசி மாவட்டம் அனுமந்தபுரி என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.

மேலும் இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்றும், மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்றும் மிக விமர்சியாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அனைத்து நாட்களிலும் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலையில் பூஜையும் நடைபெறும். சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி அளவில் சிறப்பு பூஜைகள் அன்னதானமும் வழங்கப்படும்.

கடத்தப்பட்ட மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..? காதல் கணவர் கதறல்.. தென்காசியில் பரபரப்பு

வெண்ணைக்காப்பு, வடமாலை, வெற்றிலை, துளசி மாலை, பழமாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை பயக்கும் என்றும் இதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்றும் அதேபோல் வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi