ஹோம் /தென்காசி /

தென்காசி: ரூ.5கோடி வரை பிஸினஸ் ப்ளான் இருக்கா? கடனுதவிக்கு அரசு ரெடி.. முழு விவரம்!

தென்காசி: ரூ.5கோடி வரை பிஸினஸ் ப்ளான் இருக்கா? கடனுதவிக்கு அரசு ரெடி.. முழு விவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தொழில் தொடங்க நினைக்கும் பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்பு பிரிவினருக்கு 5% கடனுதவி தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படும்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை கிராமத்தில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS SCHEME) மூலம் தொடங்கப்பட்ட தென்னை நார் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொழில் செய்ய விரும்பும் முதல் தலைமுறையினரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும் ஊக்கமளிக்கவும் தனித்துவமாக அரசால் உருவாக்கப்பட்டது தான் நீட்ஸ் (தேவை) சேவை. 21-35 க்குள் இருக்கும் இளைஞர்கள் தான் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருக்க முடியும்.

இதில் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்காக 45 வயது வரை இருக்கலாம்.

இந்த நீட்ஸ் சேவையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.500 லட்சம் வரையிலான திட்டத் தொகையில் உற்பத்தி அல்லது சேவைத் தொழில் நிறுவனங்கள் இருத்தல் வேண்டும்.

இதையும் படிங்க | ரோடும் இல்லை.. பஸ் வசதி இல்லை.. பாடலிங்க சாஸ்தா கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி

தொழில் தொடங்க நினைக்கும் பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்பு பிரிவினருக்கு 5% கடனுதவி தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படும். சில பிரிவுகளில் வட்டியில் மானியமும் வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் msmeonline.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi