ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் ரூ.55.70 கோடி மதிப்பீட்டில் 5 மருத்துவமனைகள் வர போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் ரூ.55.70 கோடி மதிப்பீட்டில் 5 மருத்துவமனைகள் வர போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?

கோப்பு படம்

கோப்பு படம்

Sankarankovil Kalingapatti | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tenkasi | Sankarankoil (Sankarankovil)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் குறைகள் பற்றி கேட்டறிந்தனர். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி கர்ப்பிணி பெண்களுக்கு மேள தாளங்கள் முழங்க சந்தனம் பூசி,மாலை அணிவித்து வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

பின்னர் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்கள் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளார். சமூகப் பிரச்சனைக்கான போராட்டங்கள் நடை பயணம் உள்ளிட்டவற்றை நடத்தி தீர்வு கண்ட பெருமை அவரையே சாரும்.

தமிழ்நாட்டைப் போன்று இரண்டு மடங்கு அதிக அளவு மக்கள் தொகையை கொண்டஉத்தரபிரதேச மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு 50 சுகாதார நிலையங்கள் கிடைத்துள்ளது

அதில் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையமும்,25 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைய உள்ளது, அதில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கீழக்கலங்கல் என்னும் இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளது என தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்திற்க்குரூ.55.70 கோடி திட்ட மதிப்பீட்டில் 21 அறிவிப்புகளின் மூலம் மாவட்டத்தில் 5 மருத்துவமனைகள் அமைய உள்ளது. தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய நகராட்சிகளில் தலா ஒரு மருத்துவமனையும், கடையநல்லூர் நகராட்சியில் இரண்டு மருத்துவமனை என மொத்தம் 5 மருத்துவமனைகள் அமைய உள்ளது.

மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறையானது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஒதுக்கும் பட்சத்தில் முதலாவதாக தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, இந்த மருத்துவமனை சீரோடும் சிறப்போடும் இருப்பதற்கும் சுகாதார நிலையத்தை மத்திய அரசு உட்பட அனைவரும் பாராட்டும் வகையில் அமைய உறுதுணையாக இருந்த வைகோ அவர்களை மனதார பாராட்டுகிறேன் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுத்த நிலையில் அதனை கூடிய விரைவில் ஏற்பாடு செய்ய உறுதுணையாக தமிழக அரசு துணி நிற்கும் , கருத்துக்களை எளிதில் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக உரையாற்றும் திறமை படைத்தவர் வைகோ என முத்தமிழ் அறிஞர் கலைஞரின் போர்வாள் என புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு முதல்வர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டுமென சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்தப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம் ஆகும் மக்களுக்கு எளிதில் மருத்துவம் கிடைக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் வருமுன் காப்போம் என்ற திட்டத்தை அமல்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் நீட்சியாக தற்போது தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர், மதிமுக தலைமை செயலாளர் துரை.வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம். குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா (சங்கரன்கோவில்), டாக்டர். சதன் திருமலை குமார் (வாசுதேவநல்லூர்), டாக்டர். ரகுராமன்,பூமிநாதன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமிகனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் தேவிராஜகோபால், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்திரகுமார், கலிங்கப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் அருள்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Govt hospitals, Kanimozhi, Local News, Tenkasi, Vaiko