மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது தான் நம்மளோட தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம். மேலும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தான் மணிமுத்தாறு தாமிரபரணி ஆரோட பிறப்பிடமா இருக்குது. தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கி விட்டாலே தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் சாரல்கள் சீசன்கள் தொடங்கிவிடும். தென்மேற்கு பருவ காலம் ஆரம்பித்த உடனே குற்றாலத்தில் நீர்கள் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கும்.
அதாவது ஜூலை,ஆகஸ்ட் போன்ற மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும். குற்றாலத்திற்கு செல்லும் வழியில் ஓங்கி உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையை காண முடியும் அதில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் ஏதோ ஓடை போன்று தெரியும் அது வேறொன்றுமில்லை அதுவே நாம் செல்ல இருக்கும் குற்றாலம். தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும்.
தென்காசியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்குற்றாலம். ஐந்தருவி,சிற்றருவி என பல அருவிகள் இருந்தாலும் பேரருவி அதாவது மெயின் அருவி தான் பொதுவாக குற்றாலம் என்று அறியப்படும். சீசன் நேரங்களில் மற்ற அருவிகளை காட்டிலும் மெயின் அருவிகே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவார்கள் தனியாக வண்டியில் வருபவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரத்திற்கு படிகளில் இறங்கி வர வேண்டும். செல்லும் வழி முழுக்க குற்றாலத்திற்கே பெயர் போன சிப்ஸ் கடைகள், மூலிகை கடைகள், ஸ்வட்டர் கடைகள் போன்ற பல கடைகள் வரிசையாக இருக்கும்.
குற்றாலத்தில் குளிப்பதற்கு ஆண்கள், பெண்கள் என இரு பிரிவில் குளிக்க அனுமதி வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பெண்கள் பகுதியில் உடை மாற்றுவதற்கு இடமும் ஆண்கள் பகுதியில் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடமும் இருக்கிறது.மெயின் அருவி எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் தான் இருக்கிறது. இந்த அருவியில் அதிக உயரத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி பின் அங்கிருந்து வழிந்து கீழே இறங்குகிறது. சுற்றுலா மக்களைக் கவரும் வகையில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான் குற்றால சீசன் என அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் மூலிகைச் செடிகளின் மீது பட்டு அதன் சாறுகள் தண்ணீரோடும் பல்வேறு கனிமங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.
இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மெயின் அருவியில் அமைந்திருக்கும் பாறையில் சிவன் போன்று கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இது காண்போரை வியப்படையும் வகையில் அமைந்துள்ளது. இந்த கிளைமேட் கட் சில்லுனு ஒரு குளியல் போட மெயின் அருவிக்கு ஒரு விசிட் செய்து பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi