முகப்பு /தென்காசி /

சிலம்பம் சுற்றிக்கொண்டே பேரணியாக சென்ற சங்கரன்கோவில் மாணவிகள்

சிலம்பம் சுற்றிக்கொண்டே பேரணியாக சென்ற சங்கரன்கோவில் மாணவிகள்

X
சிலம்பம்

சிலம்பம் சுற்றிக்கொண்டே பேரணியாக சென்ற சங்கரன்கோவில் மாணவிகள்

Tenkasi News : தென்காசியில் 500க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் பேரணியாக சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக இயக்கத்தின் தலைவர் பேடன் பவல் பிறந்த தினம் சிந்தனை தினமாக கொண்டாடப்பட்டது. பாரத சாரண - சாரணியர்களின் பேரணி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமை ஆசிரியர் பார்த்திபன் கொடி அசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தனர். சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட இந்த பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த பேரணி நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட சாரண - சாரணிய மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட சாரண சாரணியர் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாவட்ட ஆணையாளர் பழனிச்செல்வம் பொருளாளர் டேவிட் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi