நம்ம எல்லாம் சின்ன வயசுல டியூஷனுக்கு போகாமா விளையாடிட்டு இருந்தா வீட்டுல விளையாடினது போதும் டியூஷன் போய் படிக்கிற வேலைய பாருன்னு அம்மா சொல்லுவாங்க... ஆனா இப்போ நம்ம தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழே குழந்தைகளுக்கு செயல்பாட்டு முறை கல்வியை அதுவும் குறிப்பாக 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு விளையாடிட்டே படிப்பை சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.
இது பள்ளிக்கூடத்துல கொடுக்கிற ஹோம் ஒர்க் பண்றதுக்கான டியூஷன் கிடையாது. குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கிற நோக்கமா வச்சுட்டு தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் தெளிவா கத்துக்கணும் அப்படிங்கறதுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் இந்த இல்லம் தேடி கல்வி திட்டம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்தத் திட்டத்தின் கீழே நம்ம ஆசிரியரா பணியாற்றணும் அப்படினா நமக்கு 17 வயசு நிரம்பி இருக்கணும். தமிழ்ல உரையாடுறதுக்கு சரளமாக வரணும் குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு வழியிலேயே கற்றுக் கொடுக்கனும். அப்படி இருக்கிற யாரா இருந்தாலும் இல்லம் தேடி கல்வி வலைதளத்தில் பதிவு செஞ்சுக்கலாம். பதிவு செஞ்ச உங்களுக்கு ஒரு தேர்வு வச்சு அதன் அடிப்படையில உங்கள தேர்ந்தெடுப்பாங்க.
பதிவு செய்யும்போதே நம்மளோட வார்டு டீட்டைல் எல்லாமே தெளிவா கொடுக்கணும். அது மூலமா நம்ம வார்டுல இருக்குற அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளை 20 பேர் வரைக்கும் நம்ம தேர்ந்தெடுத்து அவங்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். மேலும் இதற்கான ஊதியமாக அரசாங்க தரப்பில் இருந்து ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi